தா.பழூர் அருகே காரைக்குறிச்சியில் மழைநீர்ஓடுவதற்காக வெட்டப்பட்ட வாய்க்காலால் வாகனஓட்டிகள் அவதி

தா.பழூர், பிப்.12: மழை தண்ணீர் ஓடுவதற்காக தற்காலிகமாக சாலை ஓரம் பெரிய அளவில் வெட்டப்பட்ட தற்காலிக வாய்க்காலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  அவதியடைந்து வருகின்றனர்.

 அரியலூர்  மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் மூக்க தெருவில் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது மழை தண்ணீர் ஓடுவதற்காக தற்காலிகமாக சாலையின் ஓரம் பெரிய அளவில் வாய்க்கால் வெட்டப்பட்டது. தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இன்றி சாலையில் முட்டு முட்டாக கொட்டி கிடப்பதோடு வாய்க்காலும் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மழை பெய்தபோது தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலைமை ஏற்பட்டது அப்போது பஞ்சாயத்து யூனியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்  கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டு பின்னர் பஞ்சாயத்து அலுவலர்கள் வந்து தண்ணீர் வெளியேற தற்காலிகமாக

வழி வகை ஏற்படுத்தினர்.

பின்னர் நிரந்தரமாக தண்ணீர் வெளியேறுவதற்கு வழி செய்வதாகவும் கூறி சாலையோரம் பள்ளங்கள் தோண்டி மண்ணை எடுத்து ரோட்டின் நடுவே போட்டுவிட்டு சென்றனர். தற்போது நான்கு ஐந்து மாதங்களாக இந்த சாலையில் சென்று வருவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலை சாலையில் மண்கள் திட்டாக கிடப்பதால் சாலையில் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இந்த வழியாக பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும்  அதிகமாக பள்ளங்கள் இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிக்கும்போது வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர்.

லேசாக மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி கொண்டு சேறும் சகதியுமாக உள்ளதாகவும்  பள்ளி சிறுவர்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் வழுக்கி விழுந்து  விடுகின்றனர். இரவு நேரங்களில் வயதானவர்கள் இந்த சாலையில் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து அடிபட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்

என்பது குறிப்பிட தக்கது.  

இதனை சீரமைக்க தா.பழூர் பஞ்சாயத்து யூனியன் அலட்சிய போக்கு காட்டி வருவதாகவும் இந்த சாலை பேராபத்தை ஏற்படுத்துவதற்கு முன் மாவட்ட நிர்வாகம்  சாலையை சரி செய்து தோண்டப்பட்ட பள்ளத்தை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மழைக்காலங்களில் நீர் வெளியேற பாதுகாப்பான வழிமுறைகள் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள்

கோரிக்கை விடுத்துள்ளனர்.     

Related Stories: