விளாத்திகுளம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விளாத்திகுளம், பிப். 8:  விளாத்திகுளம் அரசு  மேல்நிலைப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு முன்னர் 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நடந்தது.  தலைமை ஆசிரியை ரோஸ்லிண்ட் சாந்தி தலைமை வகித்தார்.முன்னாள்  மாணவர்கள் கோசல்ராம், சிவசுப்பிரமணியம்,  மீனாட்சிசுந்தரம், கோபாலகிருஷ்ணமூர்த்தி  முன்னிலை  வகித்தனர். முன்னாள் மாணவர் எட்டப்பராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 1968-1969ம் ஆண்டுகளில்  பள்ளி ஆசிரியர்களாக இருந்த  சண்முகம், பரிசித்தவராஜ், ரத்தினமுத்து பேசினர். மேலும் பழைய மாணவர்களில் 5 பெண்கள் உள்ளிட்ட 35  பேர் பங்கேற்றனர். துவக்கத்தில் மறைந்த முன்னாள்  மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள், பழைய நினைவுகளை  பகிர்ந்துக் கொண்டனர். இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடு பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2  லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் இயந்திரத்தை அன்பளிப்பாக  வழங்கினர். தொடர்ந்து பள்ளி சார்பில் பழைய மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள்  வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பால்சாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: