சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்

சாத்தான்குளம், ஜூன் 12: சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தோவான் ஆலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டத்தையொட்டி தேவாலயத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தேவான் ஆலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. ஆராதனையில் சேகரகுரு டேவிட் ஞானையா சிறப்பு செய்தி வழங்கினார். இதனையடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரக்கன்றுகள் வளர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆலயத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை சேகரகுருவானவரும், சேகர தலைவருமான டேவிட் ஞானையா வழங்கினார். இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் குணசீலன், கிருபாகரன், சேகர செயலாளர் தியோனிஷ் சசிமார்சன், பொருளாளர் மனோதங்கராஜ், சபை ஊழியர் சாலமோன் ராஜ், நிர்வாகிகள் ராபின்சன், மோசே உள்ளிட்ட சபை மக்கள் கலந்து கொண்டனர்.

The post சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: