தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் கரூர் நெரூர் அக்ரஹாரத்தில் வழிகாட்டி பலகை சீரமைக்காததால் திணறி வரும் வாகன ஓட்டிகள்

கரூர், பிப். 6:கரூர் அருகே உள்ள நெரூர் அக்ரஹாரத்தில் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயன்படும்வகையில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் காற்றில் பலகை சரிந்து விழுந்தது. அதனை அப்படியே விட்டு விட்டனர். இதனால் புதிதாக இவ்வழியே வரும் வாகன ஒட்டிகள் வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே உடனடியாக வழிகாட்டி பலகையை சரிசெய்து வைக்க வேண்டும்.

இதுபோல பிற பகுதிகளிலும் உள்ள பலகைகளையும் சீரமைத்து வைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: