ஆர்.எஸ்.மங்கலம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

ஆர்.எஸ்.மங்கலம், பிப். 2: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவெளி கிராமத்தில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.      ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மேட்டுக்கற்களத்தூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (60). இவர் தற்போது குடும்பத்துடன் சனவெளி அருகே உள்ள வேல்நகரில் வசித்து வருகிறார். இவர் நேற்று குடும்பத்தாருடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்காக வெளியே சென்றுவிட்டார். ஆரோக்கியசாமி வீடு திரும்பியபோது வீட்டின் பின்புறக்கதவு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் நகை, கலர் டிவி, வெள்ளி பொருட்கள், ரூ.12 ஆயிரம் உள்பட ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது தெரிந்தது.இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் ஆரோக்யசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் செல்வதற்கே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

Related Stories: