தென்காசி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

தென்காசி, பிப். 1:  தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியை லோகநாயகி தலைமை வகித்தார்.  சிறுதானிய இடியாப்பம், நவதானிய சத்துமாவு உருண்டை, பால் கொழுக்கட்டை, பாசிப்பருப்பு லட்டு, முடக்கத்தான் தோசை, கேப்பை தோசை, கம்பு தோசை, எள்ளுப்பொடி, சிறுதானிய கட்லெட், கம்பங்கூழ், முருங்கை கீரை கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகளை 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர். தொடர்ந்து பாரம்பரிய உணவுகளின் பயன்கள் குறித்து சித்த மருத்துவர் கவிதா பேசினார். ஏற்பாடுகளை தமிழாசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: