சேரன்மகாதேவியில் கோயில் கொடை விழாவில் மோதல்

வீரவநல்லூர், மே 16: சேரன்மகாதேவியில் கோயில் கொடை விழாவில் மோதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேரன்மகாதேவி முனைசேகரன் குடியிருப்பு, ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் வனராஜா (29). இவரை அப்பகுதியில் உள்ள ஒரு கோயில் கொடை விழாவில் வைத்து அதே பகுதியை சேர்ந்த சிம்சோன் ராஜ் (25), ஆலடி மணி நகரை சேர்ந்த ஆனந்த் (25) ஆகிய இருவரும் அவதூறாக பேசி தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வனராஜா சேரன்மகாதேவி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ சிவா வழக்குப்பதிந்து சிம்சோன் ராஜ், ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்து பாளை மத்தியசிறையில் அடைத்தார்.

The post சேரன்மகாதேவியில் கோயில் கொடை விழாவில் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: