அறந்தாங்கி ஜிஹெச்சில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

அறந்தாங்கி,ஜன.25: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை இணை இயக்குனர் சந்திரசேகரன் தலை மை வகித்தார். தலைமை குடிமை மருத்துவர் ரவி முன்னிலை வகித்தார்.விழாவில் மருத்துவர்கள் , மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட இணை இயக்குனர் சந்திரசேகர் அளித்த பேட்டியில், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு அனுமதிக் காமல் இங்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.தேசிய சான்று வழங்கும் நிறுவனம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கிடை ப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு சான்று அளிக்க உறுதி அளித் துள்ளனர் என்றார்.

 

Related Stories: