கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் சோழமாதேவியில் வேளாண் திருவிழா

தா.பழூர், ஜன.23: அரியலூர் மாவட்டம் கிரீடு வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்மை துறையும் இணைந்து சோழமாதேவி தனியார் திருமண மண்டபத்தில் வேளாண் திருவிழா நடைபெற்றது. அரியலூர்  கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் விழாவினை துவக்கி வைத்து  பேசினார். விழாவின் நோக்கம் பற்றி  வேளாண் துணை இயக்குநர் பழனிச்சாமி விரிவாக பேசினார். மைய தலைவர்  நடனசபாபதி வாழ்த்தி பேசினார். தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அன்புராஜன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இளவரசன், பட்டுப்புழு வளர்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் மல்லிகா, நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரகுராமன் ஆகியோர் தங்கள் துறையின் திட்டங்கள் பற்றி விரிவாக  பேசினர். ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தொழில்நுட்ப  மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர்  அழகுகண்ணன், ரபி பருவ தொழில்நுட்பங்கள் பற்றி மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜாஜோஸ்லின் மற்றும் அசோக்குமார் ஆகியோர் விரிவாக  பேசினர்.  விழாவில் அனைத்து ஒன்றிய வேளாண் உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார வளர்ச்சி மேலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா நன்றி கூறினார்.

Related Stories: