மண்ணச்சநல்லூரில் அடகு கடையில் கொள்ளை முயற்சி

மண்ணச்சநல்லூர், ஜன. 22: மண்ணச்சநல்லூரில் அடகு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆசாமிகள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினர். இதனால் ரூ.2 கோடி மற்றும் 250 கிேலா நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது.மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. இங்கு மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் தங்களது நகையை அடகு பணம் வாங்கி செலவு செய்வது வழக்கம். இதனால் கடையில் சுமார் 250 கிலோ வரை அடகு நகைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது மேலும் 2 லாக்கர்களில் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் ரொக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடை அருகில் உள்ள சந்து வழியாக வந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து கடைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் லாக்கரை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அைடந்து கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் நேற்று கடையை திறந்த மேலாளர் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை அறிந்து திடுக்கிட்டார். இது குறித்து அவர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து கடையில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

Related Stories: