மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உதவி

ஊட்டி, ஜன. 22: ஊட்டியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கை கால் செயல் இழந்தவருக்கு கலெக்டர் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துக் கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன், மருத்துவ செல்விற்கு நிதி, சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு மொத்தம் 171 மனுக்கள் வந்திருந்தன. மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஆதரவற்ற மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊட்டியை சேர்ந்த 4 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டரின் விருப்பபுரிமை நிதியில் இருந்து நடுவட்டம் பால்ஸ் பகுதியை ேசர்ந்த ஈஸ்வரி என்பவருக்கு ரூ.30 ஆயிரத்திற்கான காசோலை, கூடலூர் தேவாலா ரேஞ்ச் கரியசோலை பகுதியை சேர்ந்த கை, கால் செயல் இழந்த பிரான்சீஸ் என்பவருக்கு ரூ.30 ஆயிரமும், உப்பட்டி பகுதியை சேர்ந்த பாக்கியம் என்பவரின் கணவர் குழந்தைவேல் மருத்துவ செலவிற்காக ரூ.25 ஆயிரத்திற்கான காேசாலையும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், தனத்துணை ஆட்சியர் முருகன், நேர்முக உதவியாளர் பாஸ்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேல் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: