மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

திருவள்ளூர், ஜன.22: திருவள்ளூர் சி.சி.சி.மெட்ரிக் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில், தீத்தடுப்பு குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார். மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சி.பாலசுப்பிரமணி, உதவி தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், நகர தீயணைப்பு துறை அலுவலர் சி.செல்வராஜ், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு, தீயணைப்பு குறித்த விழிப்புணர்வையும், பள்ளியில் தீயினால் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து  தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.மேலும், மின்சாதனங்கள் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீயை அணைப்பது குறித்தும் விளக்கினர். கட்டிடங்களில் தீப்பற்றினால் மாணவர்களை காப்பாற்றுவதும், தீக்காயம் ஏற்பட்ட மாணவர்களை 108 அவசர ஊர்தியில் ஏற்றுவது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: