வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி,ஜன.18:மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் உமேதால் என்பவரது மகள் ரவீனா(20). இவர் அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி வேலூர் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் ரவீனா குடியிருந்து வந்தார். இவர் அவிநாசி அருகே புதுதிருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தார். தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் வீட்டிலேயே நேற்று  இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டு அருகே  குழாயில் குடிநீர் வந்தபோது பக்கத்து வீட்டுகாரர் தண்ணீர்பிடிக்க கதவை தட்டியபோது, எந்தவித பதிலும் இல்லை.  கதவு திறக்காததால், வீட்டின் பின்புறமாக சென்று ஜன்னல்வழியாக பார்த்துள்ளார். அப்போது, ரவீனா துப்பாட்டாவால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில் இது தொடர்பாக அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: