திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வே பாலம் கட்டும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் ரயில்வே பாலம் கட்டும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சப்வே பாலம் கட்டும் பணியினை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் சப்வே பணியை விரைந்து முடிக்க நாகை எம்பி செல்வராஜ் கோரிக்கை விடுத்ததையடுத்து திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் கட்டிமேடு வழியாக செல்லும் ரயில்பாதையில் சப்வே பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தேவை இருப்பதால் போர்க்கால அடிப்படையில் பணியினை நிறைவேற்றவும் தற்காலிகமாக பாசனத்திற்கு வாய்க்கால் அமைத்து தண்ணீர் வழங்கவும் உத்தரவிட்டார். தாசில்தார் ஜெகதீசன், துணை தாசில்தார் சிரஞ்சீவிராஜா, கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், கல்விப் புரவலர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்….

The post திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வே பாலம் கட்டும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: