267 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சை, ஜன. 18: தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெல் கொள்முதலுக்காக 267 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் நெல் அறுவடை பணி துவங்கிய கிராமங்களில் நெல் கொள்முதல் மேற்கொள்வதற்காக இதுவரை 267 கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது. தஞ்சை வட்டத்தில் 29 இடங்கள், பூதலூர் வட்டத்தில் 7 இடங்கள், திருவையாறு வட்டத்தில் 10 இடங்கள், ஒரத்தநாடு வட்டத்தில் 76 இடங்கள், பட்டுக்கோட்டை வட்டத்தில் 17 இடங்கள், பேராவூரணி வட்டத்தில் 9 இடங்கள், பாபநாசம் வட்டத்தில் 45 இடங்கள், கும்பகோணம் வட்டத்தில் 41 இடங்கள், திருவிடைமருதூர் வட்டத்தில் 33 இடங்களில் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.மேலும் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.விவசாயிகள் அறுவடை செய்யும் சம்பா, தாளடி நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: