காணும் பொங்கல் விழா ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை, ஜன. 18: காணும் பொங்கலை முன்னிட்டு சென்ட்ரல், எழும்பூர், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள சுற்றுலா இடங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள், வணிக வளாகம், மெரினா, பெசன்ட் நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர்  பூங்கா, மாமல்லபுரம் ஆகிய சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.

  சுற்றுலா தலங்களுக்கு செல்ல புறநகர் ரயில், பறக்கும் ரயிலைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்தினர். இதனால் வழக்கத்தை விட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு  போன்ற அசம்பாவித சம்பவங்களில் சமூக விரோதிகள் ஈடுபடுவார்கள் என்பதால் ரயில் நிலையங்களில் கூடுதலாக 200க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசாரும், 100க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: