எ.புதூர் காவல் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து பலி

திருச்சி, ஜன.11:  திருச்சி கருமண்டபம் குளத்துரையை சேர்ந்தவர் பாண்டியன் (எ) சவுந்திரபாண்டியன் (60). இவரது மனைவி திலகவதி (53). கட்டிட தொழிலாளி. கடந்த நவம்பர் மாதம். எ.புதூரில் உள்ள வீட்டில் கட்டிட வேலை பார்க்கும்போது மயங்கி விழுந்து திலகவதி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் எபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் இறந்த மனைவிக்கு கட்டிட உரிமையாளரிடம் இழப்பீடு வாங்கி தரக் கோரி கணவர் பாண்டியன் எ.புதூர் போலீசில் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் நேற்றிரவு உறவினர்களுடன் எ.புதூர் காவல் நிலையம் வந்த பாண்டியன் காவல் நிலைய வளாகத்தில் உள்ள வெட்ட வெளியில் மரத்தடியில் காத்திருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த பாண்டியனை உறவினர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து வழக்கு பதிந்த எ.புதூர் போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலைய வளாகத்தில் பாண்டியன் மயங்கி விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல் நிலைய வளாகத்தில்  இறந்ததால் கஸ்டடி டெத் என கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: