திருச்சியில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

திருச்சி, ஜன.10: திருச்சியில் நடந்த குடியரசு தினவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கலெக்டர் ராஜாமணி பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகளை காவல்துறையினர் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து பேசியதாவது:திருச்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி போன்ற வசதிகளை காவல்துறையினர் செய்ய வேண்டும். சுகாதாரம், குடிநீர் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கல்வித் துறை அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

போதிய பஸ் வசதியை போக்குவரத்துத்துறை செய்ய வேண்டும். குடியரசு தினத்தன்று சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்படவுள்ளது. அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல்துறை துணை கமிஷனர் நிஷா (சட்டம்-ஒழுங்கு), டிஆர்ஓ சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கலெக்டர் பிஏ (பொது) சிவருத்ரய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: