புல்லரம்பாக்கம் கிராமத்தில் தாய், மகன் உள்பட 3 பேருக்கு டெங்கு: மீண்டும் பரவும் அபாயம்

திருவள்ளூர், ஜன. 4: திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் மூவருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதால், அங்கு மேலும் நோய் பரவாமல் தடுக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காயத்ரி (38), இவரது மகன் பரத் (12), பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹேமநாதன் (40) ஆகிய 3 பேருக்கு, தொடர்ந்து காய்ச்சல் இருந்து வருகிறது. இதனால் அவர்களது  உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அக்கிராமத்தில் மேலும் டெங்கு  காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால் தொடர்ந்து கிராமத்தில் தூய்மை பணிகள் மற்றும் கொசு புகை அடிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காய்ச்சல்  உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, நிலவேம்பு குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

Related Stories: