புரவலர் உலகராஜ் நன்றி கூறினார். பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்க விளக்குப்பொறி 90 சதவீத மானிய விலையில் வழங்கல்

சாயல்குடி, ஜன.3: சாயல்குடி பகுதி விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி சூரிய ஒளி விளக்கு பொறி வழங்கப்பட்டது.உளுந்து, பருத்தி மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்களை  பூச்சிகள் தாக்கி வருகின்றன. இதில் அந்திபூச்சி அதிகமாக பயிர்களை தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய மின்விளக்கு பொறி வழங்க விவசாயத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது இந்த விளக்குகளை வழங்கி வருகிறது. கடலாடி வேளாண் விரிவாக்க மையம் சார்பில் உதவி இயக்குனர் முருகேஸ்வரி விவசாயிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘அந்திபூச்சி தாக்கத்தால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் 90 சதவீத மானியவிலையில் சூரியஒளி மின்விளக்கு பொறி வழங்கப்படுகிறது. இவ்விளக்கை வயற்காட்டில் பயிர்களுக்கு மத்தியில் வானொளி எனும் பெரிய பாத்திரத்தை வைத்து, அதன் மேல் விளக்கை வைக்க வேண்டும். இரவு நேரங்களில் வரக்கூடிய அந்திப்பூச்சி போன்ற பூச்சிகள் விளக்கால் ஈர்க்கப்பட்டு, பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் விழுந்து இறந்துவிடும். இதனால் பயிர்களுக்கு பாதுகாப்பு ஏற்படும். மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்திலும் கூடுதல் திறன்கொண்ட சூரியஒளி மின்விளக்கு பொறி மானியவிலையில் வழங்கப்படும்’’ என்றார்.

Related Stories: