ஒட்டன்சத்திரம் பகுதியில் வாகனங்களை திருடும் வடமாநில இளைஞர்கள்? பொதுமக்கள் அச்சம்

ஒட்டன்சததிரம், டிச. 25:  ஒட்டன்சத்திரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் வியாபாரிகள் என்ற போர்வையில் வாகனங்களை திருடி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  ஒட்டன்சத்திரம் அருகே நல்லாக்கவுண்டன்நகரை சேர்ந்தவர் கார்த்திக்சுதன் (36). நகராட்சி ஒப்பந்த பணியாளர். கடந்த 21ம் தேதி இரவு இவர் தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். காலையில் எழுந்து பார்க்கும் போது டூவீலரை காணவில்லை. உடனே வீட்டின் அருகில் பொறுத்தியிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் 2 பேர் டூவீலரை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுகுறித்து கார்த்திக்சுதன் அளித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  ஒட்டன்சத்திரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் அதிகளவில் போர்வை, பெட்சீட், துணிமணிகள், எலக்ட்ரானக் பொருட்கள் விற்பதுபோல் நகரில் வலம் வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: