பாரதிய கிஷான் சங்க மாநில மாநாடு கலந்தாய்வு கூட்டம்

திருச்சி, டிச.19:  பாரதிய கிசான் சங்கம் மாநில மாநாடு ஜன.5ம் தேதி மதுரையில் நடத்த உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாவட்டந்தோறும் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான வசதிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் திருவானைக்காவலில் நேற்று முன்தினம் நடந்தது. மாநில தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். தமிழகத்தின் மாநில, கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் விஷேச அழைப்பாளர்கள் என 30 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை அகில பாரத செயலாளர் பெருமாள் துவக்கி வைத்தார். மாநாடு குறித்து 31ம் தேதி வரை விழிப்புணர்வு யாத்திரை நடத்துவது, பல்வேறு விதங்களில் விளம்பரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

விவசாய வாழ்வாதார பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டின் தீர்மானங்கள் இயற்கை விவசாயத்தை, நவீன தொழில்நுட்பத்தை லாபகரமான விலை பெறும் வகையில் உள்நாட்டு சந்தை நிலவரங்களை நிர்ணயிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் இருக்கும் வகையில் தீர்மானக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்பாரத அமைப்பு செயலாளர் ஸ்ரீகணேசன், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சிவகணேசன், மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

Related Stories: