ஆலமன்குறிச்சியில் எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கும்பகோணம், டிச. 19: கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள ஆலமன்குறிச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் ஆலமன்குறிச்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு தெரு மின்விளக்கு, வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது மின்கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்சார துறையிடம் பொதுமக்கள் தெரிவித்தும் புதிய மின்கம்பங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. வயல்கள், சாலையோரங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் காட்சியளிப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: