பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி பேரணியாக செல்ல முயன்ற விஏஓ சங்கத்தினர் 36பேர் கைது

அரியலூர், டிச.19: அரியலூர் காமராஜர் சிலையருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பேரணியாக செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு முன்பு அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்  , கிராம நிர்வாக அலுவலர்கள் இதுநாள் வரை பொதுமக்களுக்கு வழங்கி வரும் இணைய சான்றுகள் வழங்கும் சேவையினை தங்களது சொந்த செலவிலேயே வழங்கி வருகின்றனர்.இணையத்திற்கான செலவு மற்றும் அதற்கான கணினி இனைய சேவையினை தமிழக அரசு வழங்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகலை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுவினை  கலெக்டரிடம் வழங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள்  பேரணியாக செல்ல முற்பட்டனர்.இதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவிக்கவே சிறிது நேரம் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி பேரணியாக கிராம நிர்வாக அலுவலர்கள் செல்லமுயன்றவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி  கைது செய்தனர். இதில்  8பெண் கிராம நிர்வாக அலுவர்கள் உள்பட 36 பேர்  கைது செய்யப்பட்டனர்.

Related Stories: