நெல் வயல்களில் அசோலா வளர்ப்பதன் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம்

திண்டுக்கல், டிச. 16:  வயல்களில் அசோலா படர்ந்து இருப்பதால் களை முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் கோழி, மீன், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம். நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை கொண்டதால் கொசுக்களை  கட்டுப்படுத்துகிறது. நெல்வயலில் வளர்க்கும் போது நீர் ஆவியாவது குறைகிறது. காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையை செய்வதால் 20 சதவீதத்திற்கும் மேல் உரச்செலவு குறையும். எனவே இவற்றை வளர்ப்பது குறித்து அட்மா திட்ட மேலாளர் அருண்குமார் விவசாயிகளுக்கு செயல்முறைவிளக்கம் அளித்தார்.

முள்ளிப்பாடி விவசாயிகளிடையே அவர் கூறியதாவது: ‘‘நாற்று நடவு செய்து 10ம் நாள் 5 கிலோ அசோலாவை நெல் வயலில் தூவி வளர செய்ய வேண்டும். பயிர்களுக்கு இடையில் கிடைக்கும் காற்று, சூரியஒளியை பயன்படுத்தி இது வேகமாக வளரும். நிலத்தில் பச்சைப் போர்வை போர்த்தியது போல நிலம் முழுவதும் அசோலா படர்ந்து வளர்ந்து விடும். நெல்வயலில் இரண்டாம் களை எடுக்கும் போது அசோலா வயலில் மிதிபடும். அல்லது கேனோவீடர் சக்கரத்தில் அழுத்துவதின் மூலம் மண்ணில் கலந்து மக்கி சிறந்த தழைச்சத்து உரமாக மாறிவிடும்.

இயற்கை உரமாக மாறி மண்ணின் தரத்தை மேம்படுத்தும்’’ என்றார்.

Related Stories: