திருசக்திமுற்றம் உதவிபெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு

கும்பகோணம், டிச. 12: பட்டீஸ்வரம் திருசக்திமுற்றத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் திருசக்திமுற்றம் அக்ரஹாரம் தெருவில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. 1957ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜ், தொடக்கப்பள்ளி கட்டுவதற்காக அடிக்கல் ட்டினார். 1959ம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் உயர்நிலைப்பள்ளியாக மாறிய பின் அரசு அண்ணா மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு அப்பள்ளிக்கு மாறியது. இதைதொடர்ந்து அக்ரஹாரத்தில் உள்ள பள்ளி, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியாக தற்போது இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர், 4 ஆசிரியர்கள், 88க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தின் முன் அப்பகுதியினர் குப்பைகள் கொட்டி வருகின்றனர். மேலும் பள்ளி முன்புள்ள குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளியின் பின்புறம் பல ஆண்டுகளாக மரங்கள், செடி, கொடிகளை அகற்றாமல் உள்ளனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் ஊராட்சி நிர்வாகத்திடம் பள் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு போதுமான நிதியில்லை, வேண்டுமானால் நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் ரூ.3 ஆயிரம் சொந்த நிதி திரட்டி மரம், செடி, கொடிகளை அகற்றி பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.ஆனாலும் அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர்கள் தினமும் பள்ளி வளாகம் முன் குப்பைகள், கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே பட்டீஸ்வரம் திருசக்திமுற்றம் அக்ரஹாரம் தெருவில் உள்ள உதவிபெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: