கலெக்டரிடம் கோரிக்கை மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்

பெரம்பலூர், டிச.11: மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டரிடம் மாட்டு வண்டி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மணல்அடிப்பவர்கள் சார்பாக மருததுரை என்பவர் தலைமையில் வந்து அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பெரியாற்றில் மாட்டு வண்டிக்காரர்கள் மணல் அடிக்க வருவாய்த்துறை மூலம் அனுமதி அளிக்க வேண்டும். நாங்கள் வேறு தொழில் வாய்ப்புகள் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். அகரச்சீகூர், பெரியாற்றிலிருந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி, அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து வரும் டயர் வண்டிக்காரர்கள் மணல் அடிக்கிறார்கள்.  பெரம்பலூர் மாவட்ட டயர்வண்டிக்காரர்கள் மணல் ஏற்றுபவர்கள் அனுமதியின்றி பெரும் கஷ்டப்ப ட்டு வருகிறார்கள். எனவே அகரம்சீகூர் பகுதியிலுள்ள பெரியாற்றில் இருந்து மணல் அடிக்க மாட்டு வண்டிக்காரர்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: