ஈழதமிழர் நீதிக்காக பசுமை தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம்

வாழப்பாடி, டிச.11:  வாழப்பாடியில் பசுமை தாயகம் சார்பில் ஈழத்தமிழர் நீதிக்காகஇலங்கை மீது இந்தியா தீர்மானம் கொண்டு வரக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர். சர்வதேச மனித உரிமை தினத்தையொட்டி, வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் 40வது மனித உரிமை மாநாடு நடைபெற உள்ளது. அதில், இந்தியா அரசு 1.5லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை மீது, பன்னாட்டு நீதி விசாரணை நடத்த, தனி தீர்மானம் கொண்டு வர வேண்டிம் என வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடந்தது. அதை பிரதமருக்கும், ஐநா சபைக்கும் அனுப்பி வைக்க உள்ளனர். இதில் பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில், பாமக துணை பொது செயலாளர் குணசேகரன், சேலம் மாவட்ட செயலாளர் நடராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். அருகில் பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் இளவரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் கவுதமன் வரவேற்றார். பாலசுந்தரம், பாண்டியன், முருகேசன், முருகன், பச்சமுத்து, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: