புதுப்பாளையம் அரசு பள்ளியில் வான்அறிவியல் தொழில்நுட்ப கூடம் திறப்பு

இடைப்பாடி, டிச.11: இடைப்பாடி அருகே புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ₹2லட்சம் மதிப்பீட்டில் வான் அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூடம் திறப்பு விழா நடந்தது. இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ₹2லட்சம் மதிப்பீட்டில் வான் அறிவியல் தொழில்நுட்ப பொருட்கள் ராக்கெட், ஹெலிகாப்டர், தொலைநோக்கி உள்ளிட்ட பொருட்களை இந்தியாவின் வெளிமையம் சார்பில், புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் அரசுப்பள்ளியில் முதன் முதலாக இப்பள்ளிக்கு வழப்பட்டது. இந்த வான் அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூடம், ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தை தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ரோகினி தலைமை  வகித்தார்.

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா, கல்வி பயிற்சி இயக்குநர் பெங்களூர் பாலமோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, பள்ளி தலைமை ஆசிரியை முருகம்மாள், சங்ககிரி ஆர்டிஓ வேடியப்பன், தாசில்தார் கேசவன், வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெல்லி தலைமை பயிற்சி பிரிவு விஞ்ஞாணி வெங்கடேஸ்வரன் பேசுகையில், ‘தமிழக மாணவ, மாணவிகளிடையே அதிக அளவில் ஆர்வம் உள்ளது.  இந்தியாவின் எதிர்காலம் வான்வெளி தொழில் நுட்பத்தில் உள்ளது. உங்களை போன்ற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். இந்த அறிவியல் தொழில்நுட்ப காட்சியக கூடத்தில்,  பயின்று  நீங்களும்  விஞ்ஞாணியாக வரவேண்டும்,’ என்றார்.  விழாவில், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். டார்வின் அறிவியல் மன்ற செயலாளர் தினேஷ்செல்வராசு நன்றி கூறினார்.

Related Stories: