கரூர் நகராட்சிக்குட்பட்ட அப்னா நகரில் தார்சாலை அமைக்க கோரிக்கை

கரூர், டிச. 4: கரூர் நகராட்சிக்குட்பட்ட அப்னா நகரில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் இருந்து பொன்நகர் செல்லும் சாலையில் அப்னா நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நகருக்கு செல்லும் சாலை மண்சாலையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்கள் செல்லவும், பாதசாரிகள் செல்லும் கடும் சிரமப்படுகின்றனர். படுமோசமாக உள்ள இந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றம் செய்து தர வேண்டும் என இந்த பகுதியினர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தி பொதுமக்களின் நலன் கருதி செம்மண் சாலையாக உள்ளதை தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: