கஜா புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்க கோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

அரியலூர், நவ. 29: தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை தேசிய பேரிடராக  மத்திய அரசை அறிவிக்க வலியுறுத்தி  அரியலூர் அண்ணாசிலை அருகே தி.க தலைமையில்அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கர்  கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை மத்திய அரசு உணர்ந்து மாநில அரசு கோரும் நிதியினை வழங்கிட வேண்டும். மாநில அரசும் மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி உரிய நிதியினை பெற்றிட முயற்சிக்க வேண்டும். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அனைத்து கட்சி பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்கள் தமிழகத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண தொகையினை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தினை வஞ்சிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட கூடாது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய் அரசு முன் வர வேண்டும் என்பதனை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிமுக மாவட்ட  செயலாளர் சின்னப்பா. மண்டலத் தலைவர் தி.க காமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துரைசாமி, விசிக மாவட்ட செயலாளர் செல்வநம்பி, சிபிஐ மாவட்ட செயலாளர் தண்டபாணி, எம்ஜிஆர்கழகம் மாவட்ட செயலாளர் கலைவாணன் காங்கிரஸ் நகரசெயலாளர் சந்திரசேகர், மற்றும் திக.மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரியலூரில் நடந்தது

Related Stories: