இடைப்பாடி அருகே சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

இடைப்பாடி, நவ.28:   சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் தங்காயூர் ஊராட்சியில், காவடிக்காரனூர் மாதேஸ்வரன் கோயில் பின்புறம் சொரக்கட்யான் காட்டில் சாயப்பட்டறை மற்றும் சலவை தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். அந்த பகுதியில் சலவை நிலையம் அமைத்தால், கோனமேரி கரட்டுக்காடு, மேல்காடு, குஞ்சான்காடு, ஆட்டுக்காரன்காடு, மணல்காடு, சோனக்குட்டையூர், மளங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிப்படையும். மேலும் குட்டை, குளம், ஏரிகள் தண்ணீர் பாதிக்கும். நோய் பரவும் அபாயமும் உள்ளதால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என தங்காயூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாசில்தார் கேசவனிடம் மனு அளித்தனர். அப்போது தங்களுடைய விவசாய நிலம் பாதிக்கப்படும். அதனால் சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை என அவர்கள் வலியுறுத்தினர். தாசில்தார், மாவட்ட கலெக்டருக்கு மனுவை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

Related Stories: