மானியத்தை கழித்து வசூலிக்க வலியுறுத்தல் மாவட்டம் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியூ சார்பில் தர்ணா போராட்டம்

ராமநாதபுரம், நவ.28: போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நேற்று சிஐடியூ சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சிஐடியூ சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்  நடந்தது. மாவட்ட துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தொழிலாளர் விரோத போக்கை கைவிடுதல். முறையாக விடுப்பு கொடுத்தாலும் அப்சென்ட் போட்டு மெமோ கொடுப்பதை தவிர்த்தல்,

பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்வதை நிறுத்துதல், வசூல் இல்லாமல் இயங்கும் நடத்துனர் இல்லாத பேருந்தை இயக்குவதை நிறுத்துதல், பராமரிப்புப் பிரிவில் நிரந்தர பணியாளர்களை நியமித்தல்,  தரமான உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி போராட்ட குழுவினர் பேசினர். இதில் சிவகங்கை மாவட்ட நிர்வாகி வீரய்யா, மத்திய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: