உணவு பதப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம்

திருச்சி, நவ.21:  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர்கள் சங்கம் இணைந்து மதிப்பு கூட்டுதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் காஜாமலை வளாகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். முன்னதாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர்கள் சங்க செயலாளர் மல்லிகா வரவேற்று பேசினார். தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் பேராசிரியர் சினிஷா பேசுகையில், உணவுப்படுத்துதல் துறையில் உள்ள வாய்ப்புகள், அரசு தரும் பலவகை பயிற்சிகள், மார்க்கெட் ஏற்றுமதி செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினார். சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரி இணை பேராசிரியர் அல்லி பேசுகையில், உணவு மனையியல், ஓட்டல் நிர்வாகத்துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி பேசினார். சுய மேம்பாட்டு பயிற்சியாளர் பாசிட்டிவ் பெருமாள், துவாக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: