செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் இடைநிலை, மேல்நிலை துணைத்தேர்வுகள் ரத்து

திருச்சி, நவ.21: செப்டம்பர் மற்றும் அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை மற்றும் மேல்நிலை துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :சமீபத்தில்வெளியிடப்பட்ட ௮ரசாணை (நிலை) எண்.164. அரசுத்தேர்வுகள் துறை, நாள்.6.8.2018ல் இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டு  மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதி தோல்வியுறும் மாணவர்களுக்கு 2019 - 2020 கல்வியாண்டு முதல் மார்ச் மற்றும் ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு  மற்றும் ஜுன் மற்றும் ஜுலை பருவ சிறப்பு துணைத்தேர்வு நடத்தவும், இடைநிலை  மற்றும்மேல்நிலை பொதுத்தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் - பருவத்தில் நடத்தப்படும் துணைத்தேர்வினை ரத்து செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே2019 முதல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் பருவத்தில் இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு  மற்றும் இரண்டாமாண்டு  துணைத்தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாகவும் மற்றும் தனித்தேர்வராகவும் எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் ஜுன் மற்றும் ஜுலை சிறப்பு உடனடி தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி செப்டம்பர் மற்றும் அக்டோபர் பருவத்தில், நடத்தப்படும் துணைத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜூன் மற்றும் ஜூலை 2019 முதல், மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும் ஜூன் மற்றும் ஜூலை பருவத்தில் நடத்தப்படும். இடைநிலைக்கல்வி  மற்றும் மேல்நிலை முதலாமாண்டு  மற்றும் இரண்டாமாண்டு உடனடி சிறப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வெழுதலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: