மகேந்திரன் பேட்டி கஜா புயலால் பாதித்த டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

தஞ்சை, நவ. 20:  கஜா புயலால் பாதித்த டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், தென்னை, வாழை, பலா, மா உள்ளிட்ட மரங்கள் அழிந்து விட்டன. கோடிக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்ததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றன். தமிழக காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கிராம சாலைகள் துண்டிப்பு, குடிநீர், மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே நிவாரண பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். சாலையோரம் விழுந்து கிடக்கும் மரங்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, அண்ணாதுரை, துரைபாஸ்கரன், மணி, திருப்பதி வாண்டையார், விஜயக்குமார், அறிவு பழஞ்சூர் இளங்கோ, ரகுபதி உடனிருந்தனர்.

Related Stories: