அபிராமி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

திண்டுக்கல், நவ.16: திண்டுக்கல் அபிராமிஅம்மன், பத்மரீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. தினமும் ஒவ்வொரு வழிபாடு, பூஜை, ஆராதனைகளுடன் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஆட்டுக்கிடாய், மயில், குதிரை, சிம்ம வாகனவீதிஉலா, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட வழிபாடுகள் இடம்பெற்றன. நேற்று வள்ளி, தேவசேனா, சமேதர முருநாதருக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் நான்கு ரதவீதி வழியாக வீதிஉலா நடைபெற்றது. பின்பு அகஸ்தியர் கோயிலுக்கு வந்தடைந்த அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாலையில் வானவேடிக்கையுடன் அபிராமி அம்மன் கோயிலுக்கு சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: