விடா முயற்சி, தொடர் பயிற்சி இருந்தால் சாதனையாளர் ஆகலாம் மதுரையின் முதல் பெண் விமானி பேச்சு

வத்தலக்குண்டு, நவ. 16: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் தங்கமுத்து தலைமை வகிக்க, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கயல்விழி முன்னிலை வகித்தனர். மாணவர் நவீன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், ஏஞ்சல் பள்ளி தாளாளர் தங்கப்பாண்டியன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ஜெயராஜ் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மதுரையின் முதல் பெண் விமானியும், அரசு விமான பயிற்சியாளருமான காவியா பரிசுகள் வழங்கினார். அவர் பேசுகையில், ‘விடா முயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் சாதனையாளராகலாம்’ என்றார். சமத் பள்ளி முதல்வர் சாக்கோ வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கொடி அணிவகுப்பு மற்றும் தீ வளையத்திற்கும் பாய்வது உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்வி ஒருங்கிணைப்பாளர் ரியாஅருண் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: