முள்ளால் கிராமத்தில் ரேஷன்கடை புதிய கட்டிடம் திறப்பு

லால்குடி, நவ.15: லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் திறந்து வைத்தார்.லால்குடி ஒன்றியம் முள்ளால் கிராமத்தில் பல வருடங்களாக கூட்டுறவு நியாய விலைக்கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. எனவே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டுமென எம்எல்ஏ சவுந்தரபாண்டியனிடம் முள்ளால் பகுதி கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று கூரை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு சொந்தமாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதையடுத்து புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் சித்ரா தலைமையில், ரேஷன்கடை புதிய கட்டிடத்தை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில் சார்புநிலை பதிவாளர் அய்யாசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சேக்முஜிப், வருவாய் ஆய்வாளர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் வைரமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் லால்குடி வடக்கு தமிழ்செல்வன், தெற்கு ரவிசந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர் மருதைராஜா, விற்பனையாளர் சுதாகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் மயில்ராஜ், ராமதாஸ், நடராஜ், பிச்சைமணி, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலியன் நன்றி கூறினார்.

Related Stories: