பஞ்சாப்பில் பிப்ரவரி மாதம் பனி சறுக்குதல், படகு பயணம் துப்பாக்கி சுடுதல் போட்டிகள்

தஞ்சை, நவ. 15:  பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சண்டிகர் நேஷனல் அட்வென்ட்ச்சர் கிளப் (இந்தியா) நடத்தும் 25வது தேசிய சாகச விழா 2019ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி நடக்கிறது. இதில் மலையேறுதல், படகு பயணம், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், பனி சறுக்குதல் ஆகியவற்றில் சாகசம் செய்ய போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் வசித்து வரும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று சாகசம் செய்ய அழைக்கப்படுகின்றனர். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்தை www.nacindia.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை nacindia@yahoo.com என்ற மின்னஞ்சலில் வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: