குருவிக்கரம்பையில் பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்கும் சிறப்பு முகாம்

சேதுபாவாசத்திரம், நவ.15:  சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல் சான்று நகல்  வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா, சரக வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், மருததுரை, அருண்பிரகாஷ், கருணாநிதி, ராஜா, வேளாண் அலுவலர் அய்யம்பெருமாள், உதவி வேளாண் அலுவலர்கள் சுரேஷ், ராஜரத்தினம் பலர் பங்கேற்றனர். பெருமகளூர் வருவாய் ஆய்வாளர் அலுலகம் மற்றும் ஆவணம், பேராவூரணி சரகத்துக்கு தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடந்தது.

Advertising
Advertising

Related Stories: