அதிமுக நிர்வாகி மீது போலீஸ் தாக்குதல்?

ராமநாதபுரம், நவ.15: ராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதில் காயமடைந்த அதிமுக நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ராமநாதபுரம் எம்எஸ்கே நகரை சேர்ந்த முருகன்(42), அதிமுக ஒன்றிய இளைஞர் பாசறை துணை செயலாளர். தேவிபட்டினம் ராமநாதபுரம் இசிஆர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் முருகன் டூவீலரில் வந்துள்ளார். புல்லங்குடி கிராமம் அருகே வரும்போது, திடீரென டூவீலர் பழுதானது. இதையடுத்து, சாலையோரத்தில் அவர் நின்றுள்ளார். அப்போது ரோந்து வந்த தேவிபட்டினம் எஸ்ஐ நாகராஜபிரபு மற்றும் போலீசார் முருகனை அடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அதிமுக நிர்வாகி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றி முருகன் கூறுகையில், ‘‘டூவீலர் பழுதானதால் சாலையோரத்தில் நின்றேன். ரோந்து வந்த தேவிபட்டினம் எஸ்ஐ, ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். டூவீலர் செயின் கட்டாகி விட்டது. தம்பியை வரசொல்லியுள்ளேன் என சொன்னேன். பொய் சொல்கிறாய் என கூறி என்னை தாக்கினார். மேலும், எனது செல்போனை வாங்கி சென்று விட்டனர்’’ என்றார்.சம்பவம் குறித்து தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்நாத் கூறுகையில், ‘‘இரவில் தனியாக நின்ற முருகனை போலீசார் விசாரணை செய்து அனுப்பியுள்ளனர். போலீசார் அவரை அடிக்கவில்லை’’ என்றார். காயமடைந்த அதிமுக நிர்வாகி முருகன் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: