இருவேறு சாலை விபத்து 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.5.75 லட்சம் நஷ்டஈடு

தஞ்சை, நவ. 14: இருவேறு சாலை விபத்துகளில் காயமடைந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த அகரமாங்குடியை சேர்ந்தவர் கந்தர்ராமன் (25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்தாண்டு செப்டம்பர் 10ம் தேதி காஞ்சிபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் மோதியது. இதில் காயமடைந்த கந்தர்ராமன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் கந்தர்ராமன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து ரூ.4,19,579 நஷ்டஈடாக வழங்க தஞ்சை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நீதிபதி பூர்ணஜெயஆனந்த் உத்தரவிட்டார்.

மற்றொரு விபத்து: தஞ்சை அருகே வயலூரை சேர்ந்தவர் ஹரிஸ் (22). இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பணியாற்றி வருகிறார். 2016ம் ஆண்டு மே 25ம் தேதி கும்பகோணம் அருகே குத்தாலம் பகுதியில் மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதியது. இதில் காயமடைந்த ஹரிஸ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதைதொடர்ந்து விபத்து இழப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் ஹரிஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து ரூ.1,55,800 நஷ்டஈடாக வழங்க கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு பூர்ணஜெயஆனந்த் உத்தரவிட்டார்.

Related Stories: