நிலக்கோட்டை பேரூராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செம்பட்டி, நவ. 8: நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிலக்கோட்டை ஓன்றியக்குழு சார்பாக பேரூராட்சியில் கடுமையான சொத்துவரி உயர்வை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்த்தில் பேரூராட்சி பகுதிகளில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள 100 சதவித வீட்டுவரி உயர்வையும், தண்ணீர், கடை, பிறப்பு, இறப்பு சான்று கட்டண உயர்வை ரத்து செய்திடவும், நிலக்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரி செய்து காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்திடவும், 2 ஆண்டுகளாக நடத்தாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் உள்ளாட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கிடவும், உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில் அதிகாரிகளால் நடத்தப்படும் கொள்ளைளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஓன்றியக்குழு உறுப்பினர்கள் காசிமாயன், முருகேசன், ரவிச்சந்திரன், செந்தில்குமார், கண்ணன் உள்பட பலர் கலந்த கொண்டனர்.

Related Stories: