விசைத்தறி சேவை மையம் சார்பில் தொழில் முனைவோர் கடன் பெற சிறப்பு முகாம்

ஈரோடு, நவ. 8:  மத்திய அரசின் விசைத்தறி சேவை மையம் சார்பில், தொழில் முனைவோர் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் 16ம் தேதி நடக்கிறது.

 ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் விசைத்தறி சேவை மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் வருகின்ற 16ம் தேதி தொழில் முனைவோருக்கு முத்ரா கடன் திட்டம் மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் கடன் பெறுதல் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கான பதிவு முகாம் நடக்கிறது.

16ம் தேதி காலை 11 மணிக்கு பதிவுகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஜவுளி தொழில் விசைத்தறி சார்ந்த பணிகளில் உள்ளவர்கள், புதிய தொழில் முனைவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டு, இருப்பிட சான்றுக்கான ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: