சூறாவளி காற்று எதிரொலி மீனவர்கள் 7 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை

சேதுபாவாசத்திரம், நவ.2: வங்க கடலில் வீசிவரும் சூறாவளி காற்று காரணமாக   தஞ்சை மாவட்ட பகுதியில் 7 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆழ்கடல் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 சதவீதம் நாட்டுப்படகுகளே கடலுக்கு சென்றன.

 தஞ்சை மாவட்டம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம்,

சின்னமனை, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர்புதுத்தெரு, மந்திரிப்பட்டிணம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உட்பட 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பாய்மர படகு, பைபர் கிளாஸ் படகு, கட்டுமரங்கள் என சுமார் 5,000 நாட்டுப்படகுகளும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகளும் உள்ளன. விசைப் படகுகள் திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், மற்ற தினங்களில் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதுண்டு.

 ஆனால் நேற்று முதல் வடமேற்கு பருவ மழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் அறிகுறியாக நேற்று முதல் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

அதே சமயம் வங்கக் கடலில் சூறாவளி போல் காற்று கனமாக வீசி வருகிறது. இதனால் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய 75 சதவீதம் நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை கரை ஓரங்களில் மீன்பிடித்தொழில் தொழில் செய்யக்கூடிய 25 சதவீதம் படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றுள்ளனர்.இதனால் சுமார் 7 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். கடலுக்கு செல்லாத படகுகள் அனைத்தையும் மீனவர்கள் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

Related Stories: