டீசல் கசிவால் ஆம்னி பஸ் தீப்பற்றி நாசம் ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு

ஒட்டன்சத்திரம், அக். 23:  ஒட்டன்சத்திரம் அருகே டீசல் கசிவினால் ஆம்னி பஸ் தீப்பற்றி முழுவதுமாக எரிந்து நாசமானது. நெல்லை மாவட்டம், தென்காசியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55). இவர் தூத்துக்குடியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சுக்கு டிரைவராக இருந்து வருகிறார். நேற்று தூத்துக்குடியில் இருந்து கோவையில் நடக்கவுள்ள ஒரு திருமணத்திற்கு பயணிகளை இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தார். மதியம் 3 மணியளவில் கள்ளிமந்தையம் அருகே அப்பியம்பட்டி நால்ரோடு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கார் டிரைவர் பஸ்சில் டீசல் கசிவை பார்த்து பாலசுப்பிரமணியனிடம் கூறினார். உடனே அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி டீசல் கசிவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பஸ் தீப்பற்றி எரிய துவங்கியது. தகவலறிந்ததும் கள்ளிமந்தையம் போலீசார் விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

Related Stories: