தாகூர் பொறியியல் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா

ஆத்தூர், அக்.16:  தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தாகூர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் குழந்தைவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, அவர் பேசுகையில், பொறியியல் படிப்புக்கு என தனி அந்தஸ்து உள்ளது. அதனை பெரும்பாலானவர்கள் உணர்வது இல்லை. விஞ்ஞானிகளை உருவாக்கிடும் வகையில் கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும். இங்கே உள்ளவர்கள் தங்களின் படிப்பால் பட்டம் பெற்றதாக நினைக்க வேண்டாம். நீங்கள் பட்டம் பெற வேண்டும் என உங்கள் பெற்றோர்கள் உழைத்துள்ளனர். உங்கள் குடும்பத்தினர்,

ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்தினர் என எல்லோரும் நீங்கள் படித்து உயர அவரவர் தகுதிக்கு உழைத்துள்ளனர். இதனை நீங்கள் மறக்க கூடாது என்றார்.நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக அளவில் 46வது இடத்தை பெற்ற எம்.ஈ. மாணவி இந்துமதி, எம்பிஏ பிரிவு மாணவி பிரிக்யா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகளையும், 196 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், 143 பேருக்கு கேம்பஸ் இண்டர்வியூ பணி ஆணையும் வழங்கப்பட்டது. விழாவில் கல்வி நிறுவன செயலாளர் போராசிரியர் பரமசிவம், பொருளாளர் காளியண்ணன், துணைத்தலைவர்கள் ரவி, பிரபாகரன், இணைச் செயலாளர் முத்துசாமி, கல்விக்குழு ஆலோசகர்கள் கூட்டுரோடு பழனிவேல், தங்கவேல், பழனிவேல், நடேசன், இயக்குனர்கள் கவுரிசங்கர், ராமசாமி, சக்திவேல், சண்முகம், கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: