மக்கள்குறைதீர் கூட்டத்தில் 58 பயனாளிகளுக்கு ரூ.6லட்சத்தில் நலஉதவி

திருச்சி, அக்.16: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 58 பயனாளிகளுக்கு ரூ.6.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார். சமூகநலத்துறையின் மூலம் முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 21 பேருக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலை உள்பட 58 பயனாளிகளுக்கு ரூ.6.33லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் மொத்தம் 519 மனுக்கள் பெறப்பட்டது. டிஆர்ஓ சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். மின்கம்பம், விளக்குகள் சீரமைப்பு ஒளிரும் உத்தமர்கோயில் மேம்பாலம் மண்ணச்சநல்லூர், அக்.16: மண்ணச்சநல்லூர் அருகே தினகரன் செய்தி எதிரொலியால் உத்தமர் கோயில் ரயில்வே மேம்பாலத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டதையடுத்து மீண்டும் ஒளிரத்துவங்கியது.

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சி பகுதியில் உத்தமர்கோயில் அருகே ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தில் சென்று வருகின்றன. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் மிக அதிகமான அளவில் இந்த பாலத்தில் சென்று வருகின்றன. சுமார் 300 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் வளைவுகள் மிகுந்தது. அடிக்கடி விபத்துகள் ஏற்படக்கூடிய ஒரு பாலமாகும். இந்நிலையில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் வெளிச்ச மின்விளக்குகள் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து எரியாமல் இருந்தது. மின்கம்பங்களும் சிதைந்து கம்பங்கள் பல்வேறு திசைகளில் திரும்பி இருந்தன. இதனால் இருண்ட பாலத்தில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது உத்தமர்கோயில் மேம்பாலத்தில் இருந்த விளக்கு கம்பங்கள் சீர்செய்யப்பட்டு விளக்குகளும் சரி செய்யப்பட்டது. இதனால் தற்போது உத்தமர்கோயில் கோயில் மேம்பாலம் ஒளிர்ந்து வருகிறது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: