சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூமாலை வணிக வளாகம்

திருச்சி, அக்.16: திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். டிஆர்ஓ சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதில் துறையூர் சித்திரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் அளித்த மனுவில், ‘கொல்லம்பட்டி கிராமத்தில் முன்னாள் தலைவர் ரமேஷ், அவரது தம்பி சோமசுந்தரம், போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள குட்டைகளில் மண் குன்றாற்றில் கப்பி மணல் எடுத்து விற்பனை செய்கின்றனர். இதற்கு வருவாய்துறை அதிகாரிகள் பலரும் உடந்தையாக உள்ளனர். எனவே கொல்லம்பட்டி பஞ்சாயத்து குட்டைகளையும், வடக்கு புறம் இருந்து தென்புறமாக ஆதனூர் வரை உள்ள குன்றாற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertising
Advertising

ஆம் ஆத்மி கட்சி மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் அளித்த மனுவில், ‘மானிய விலை சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும். ஏஜென்சிகள் வீட்டுக்கு டெலிவரி கொடுக்கும்போது பில் விலையை விட ரூ.50 அல்லது அதற்கு அதிகமாக வாங்குவதை தடை செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் மனுவில், பொது மக்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக குடியிருப்புக்குள் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, டவர் அமைக்க தடைவிதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். சேப் திருநங்கை அமைப்பு நிர்வாகி கஜோல் அளித்த மனுவில், மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான பூமாலை வணிக வளாக கட்டிடத்தில் 11 கடைகளை தாண்டி புதிதாக 2 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிகரெட், குட்கா விற்பனை செய்யும் இடமாக மாறி உள்ளது. சமூக விரோதிகளின் புகழிடமாக உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப் பிட்டுள்ளார்.

இந்து முன்னணி பாலக்கரை பகுதி செயலாளர் நல்லேந்திரன் அளித்த மனுவில், ‘பாலக்கரையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 685 வீடுகளுக்கு போதிய தண்ணீர் வழங்கப்படுவதில்லை. குடிநீர் பெற மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போதிய அளவு குடிநீர் வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கலெக்டரிடம், திருநங்கை புகார் இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும்இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன்குமார் அளித்த மனுவில், ‘கல்வி ஆண்டு ஆரம்பமாகி நான்கு மாதங்கள் ஆகியும் தமிழக அரசு வழங்க வேண்டிய இலவச பஸ் பாசை மாணவர்களுக்கு வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் அனைவரும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மாணவர்களால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏழை மாணவர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனர். எனவே இலவ பஸ்பாஸ் வழங்க வேண்டும்.

Related Stories: